மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் மதுபாட்டிலால் தாக்கி கார் டிரைவர் கொலை 5 பேர் கைது + "||" + In Bangalore Attacked by alcohol Car driver killed Five arrested

பெங்களூருவில் மதுபாட்டிலால் தாக்கி கார் டிரைவர் கொலை 5 பேர் கைது

பெங்களூருவில் மதுபாட்டிலால் தாக்கி கார் டிரைவர் கொலை 5 பேர் கைது
பெங்களூருவில் மதுபாட்டிலால் தாக்கி கார் டிரைவரை கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு,

பெங்களூரு நாகரபாவி அருகே உள்ள ஜோதிநகரை சோ்ந்தவர் பிரசாத்(வயது 40). இவர் தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் பிரசாத் கடந்த 11-ந்தேதி இரவு தனது மனைவியிடம் ரூ.500 வாங்கிக் கொண்டு அப்பகுதியில் உள்ள மதுபான கடைக்கு மது அருந்த சென்றார்.


மதுபான கடையில் வைத்து பிரசாத் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகில் உள்ள மேஜையில் 5 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், பக்கத்து மேஜையில் அமர்ந்து மது அருந்தியவர்களில் ஒருவரின் செல்போன் மாயமானதாக தெரிகிறது. இதுகுறித்து அவர்கள், பிரசாத்திடம் கேட்டுள்ளனர்.

அப்போது பிரசாத், தான் செல்போனை எடுக்கவில்லை என்றும், தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் செல்போனை பிரசாத் தான் எடுத்ததாக கருதி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் 5 பேரும் சேர்ந்து பிரசாத்தை ரிங்ரோட்டில் உள்ள அறைக்கு அழைத்து சென்று அங்கு வைத்து மதுபாட்டிலால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதுபற்றி அறிந்ததும் பிரசாத்தின் மனைவி சுகன்யா அங்கு வந்தார். அப்போது அவர் முன்னிலையிலும் மர்மநபர்கள் பிரசாத்தை தாக்கி உள்ளனர். அப்போது சுகன்யா, தனது கணவரை விட்டுவிடும்படியும் மறுநாள் கொண்டு விடுவதாக கூறியுள்ளார். இதனை மறுத்த அவர்கள், சுகன்யாவை திரும்பி அனுப்பினார்கள்.

இந்த நிலையில் இரவு 10.30 மணிக்கு அவர்கள், சுகன்யாவுக்கு போன் செய்து, பிரசாத் சுயநினைவை இழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா, ரிங்ரோட்டில் உள்ள அறைக்கு சென்றார். அங்கு பிரசாத் சுயநினைவு இன்றி மயங்கி கிடந்தார். மற்ற யாரும் அங்கு இல்லை. இதையடுத்து சுகன்யா, தனது கணவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரசாத் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுகன்யா, கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து சுகன்யா, சந்திர லே-அவுட் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலையில் தொடர்புடைய சுபாஷ் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்கள் 5 பேரும், பிரசாத் செல்போனை திருடியதாக கருதி தாக்கி கொன்றார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்தார்களா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து அவர்கள் 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் பரபரப்பு சம்பவம் போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்க முயற்சி; ரவுடி சுட்டுப்பிடிப்பு கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர்
பெங்களூருவில்போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்க முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. கைதான ரவுடி கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் ஆவார்.
2. பெங்களூருவில் வசித்து வரும் ஏழை-எளிய மக்கள் பயன்பெறுவார்கள் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் திட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா அடிக்கல் நாட்டினார்
ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பெங்களூருவில் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு முதல்- மந்திரி எடியூரப்பா நேற்று அடிக்கல் நாட்டினார்.
3. பெங்களூருவில் முதல்-மந்திரி வீடு முற்றுகை போராட்டம் சித்தராமையா-காங். தலைவர்கள் கைது போலீஸ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு
முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு போலீஸ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது முதல்-மந்திரி வீட்டை முற்றுகையிட சென்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
4. பெங்களூருவில் வீட்டில் பதுக்கிய 28 துப்பாக்கிகள் பறிமுதல் 2 பேர் கைது-தீவிர விசாரணை
பெங்களூருவில் வீட்டில் பதுக்கிய 28 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
5. பெங்களூருவில் கண்காணிப்பு கேமராக்களில் சுவிங்கம் ஒட்டி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது
பெங்களூருவில் கண்காணிப்பு கேமராக்களில் சுவிங்கத்தை ஒட்டிவிட்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். எச்சரிக்கை மணி ஒலித்ததால் அவர்கள் பணத்துடன் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.