மாவட்ட செய்திகள்

வெவ்வேறு சம்பவங்களில் பள்ளிக்கூட மாணவி உள்பட 2 பேர் தற்கொலை + "||" + In different cases Two students, including a schoolgirl, commit suicide

வெவ்வேறு சம்பவங்களில் பள்ளிக்கூட மாணவி உள்பட 2 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் பள்ளிக்கூட மாணவி உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் பள்ளிக்கூட மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
நாங்குநேரி, 

வெவ்வேறு சம்பவங்களில் பள்ளிக்கூட மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பள்ளிக்கூட மாணவி 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி நேதாஜி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் இசைமதி. இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று அவர் வீட்டுப்பாடம் படிக்காமல் டி.வி. பார்த்ததாகவும், இதனை பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபம் அடைந்த இசைமதி பூச்சி மருந்தை குடித்தார். இதில் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் இசைமதி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம் 

நாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீரெங்கராஜபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் என்பவருடைய மனைவி நம்பி நாச்சியார். இவரது மகள் இசக்கியம்மாள் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் இருந்து நம்பி நாச்சியார் மனமுடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நம்பி நாச்சியார் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.