சிவகங்கையில் வாலிபர் கழுத்தை நெரித்து கொலை: ஆட்டோ டிரைவர் கள்ளக்காதலியுடன் கைது - ஜோலார்பேட்டையில் ரெயிலை நிறுத்தி போலீசார் மடக்கினர்


சிவகங்கையில் வாலிபர் கழுத்தை நெரித்து கொலை: ஆட்டோ டிரைவர் கள்ளக்காதலியுடன் கைது - ஜோலார்பேட்டையில் ரெயிலை நிறுத்தி போலீசார் மடக்கினர்
x
தினத்தந்தி 15 March 2020 11:00 PM GMT (Updated: 15 March 2020 10:31 PM GMT)

சிவகங்கையில் கள்ளக்காதல் தகராறில் வாலிபரை கழுத்தை நெரித்து கொலை செய்த ஆட்ேடா டிரைவர் கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார். சினிமாவில் வருவது போன்று போலீசார் பின் தொடர்ந்து ரெயிலை நிறுத்தி கொலையாளிகளை மடக்கினர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம், தமறாக்கி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் போதுராஜ் (வயது 36). இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகள், மகனும் உள்ளனர். வெளிநாட்டில் ேவலை பார்த்து வந்த போதுராஜ் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் வெளியே சென்ற போதுராஜ் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே சிவகங்கை மேலூர் ரோட்டில் உள்ள சஞ்சை நகரில் போதுராஜ் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சிவகங்கை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கள்ளக்காதல் தகராறில் சஞ்சை நகரைச் சேர்ந்த அஷ்டலெட்சுமி (35) என்ற பெண்ணும், அவரது கள்ளக்காதலன் லிங்கப்பாண்டியும் (25) சேர்ந்து போதுராஜை கொலை செய்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் உத்தரவின் பேரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வாசிவம், அன்சாரி உசேன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், பாண்டியராஜன் ஆகியோர் அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் அஷ்டெலட்சுமி சென்னையில் இருந்து மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெங்களூரு தப்பிச் செல்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே சென்னை சென்ற தனிப்படையினர் ரெயில்வே போலீசார் உதவியுடன் கொலையாளிகள் தப்பிச் சென்ற ரெயிலை சினிமாவில் வருவது போன்று பின் தொடர்ந்து சென்றனர்.

அந்த ரெயில் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வந்ததும் போலீசார் அந்த ரெயில் அங்கிருந்து கிளம்பிச் செல்ல முடியாத படி நிறுத்தினர். அதில் முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்த அஷ்டெலட்சுமியையும், லிங்கப்பாண்டியையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அஷ்டெலட்சுமி ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி கணவர்களை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். தற்போது கடந்த ஒரு வருடமாக சிவகங்கையில் ஆட்டோ ஓட்டி வரும் லிங்கப்பாண்டியுடன் சேர்ந்து வசித்து வந்தார்.

கொலை செய்யப்பட்ட போதுராஜூக்கும், அஷ்டலெட்சுமிக்கும் ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. போதுராஜ் வெளிநாட்டில் இருந்து வந்ததும் மீண்டும் அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி இரவு போதுராஜ் அஷ்டெலட்சுமியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென்று லிங்கப்பாண்டி வீட்டிற்கு வந்து விட்டாராம். இதனால் பயந்து போன அஷ்டெலட்சுமி தன்னை போதுராஜ் பாலியல் தொந்தரவு செய்வதாக கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சேர்ந்து போதுராஜை கழுத்தை நெரித்து கொலை செய்து அப்பகுதியில் உடலை வீசியுள்ளனர். பின்னர் போதுராஜின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சிவகங்கை பஸ் நிலையம் வந்து மதுரை வழியாக சென்னை சென்றுள்ளனர். அங்கிருந்து பெங்களூரு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

போதுராஜ் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட 24 மணி நேரத்தில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி பரிசு வழங்கினார்.

Next Story