மதுரைக்கு வேனில் வந்த சுற்றுலா பயணிகளின் உடைமைகள் திருட்டு
சாலையோர உணவகத்தில் நிறுத்தியிருந்த வேனில் சுற்றுலா பயணிகள் வைத்திருந்த உடைமைகள் மற்றும் பணம் திருடுபோனது.
மேலூர்,
ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 12 பேர் ஒரு டெம்போ வேனில் தமிழகம் வந்துள்ளனர். தஞ்சாவூர் மற்றும் திருவண்ணாமலை சென்றுவிட்டு மதுரை நோக்கி டெம்போ வேனில் வந்தனர். திருவண்னாமலை அகரம்பள்ளிட்டு கிராமத்தை சேர்ந்த டிரைவர் வேடியப்பன் (வயது32) என்பவர் வேனை ஓட்டிவந்தார்.
மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் நள்ளிரவில் சாலையோர உணவகத்தில் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். சுற்றுலா பயணிகளும், டிரைவரும் உணவகத்துக்குள் சென்று விட்டனர்.
வேனில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் உள்ளே சென்று வேனில் சாமான்கள் வைக்கும் இடத்தில் வைத்திருந்த 7 டிராவல் பேக்குகள், 1 சூட்கேஸ், 1 கேமரா மற்றும் பொருட்களுடன் ரூ.20 ஆயிரத்தையும் எடுத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் ஓடிவிட்டனர்.
உணவகத்தில் இருந்து திரும்பி சுற்றுலா பயணிகள், வேனுக்குள் சென்று பார்த்தபோதுதான் திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது. உடைமைகள் திருட்டு குறித்து மேலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story