சாப்பாடு கொடுக்க மறுத்ததால் ஆத்திரம்: பெண் குத்திக்கொலை போலீசில் கணவர் சரண்
சாப்பாடு கொடுக்க மறுத்ததால் பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவர் போலீசில் சரண் அடைந்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம் சீதேகெம்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணப்பா (வயது 49). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி கெங்க பைரம்மா (45). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நாராயணப்பா அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் போது மது அருந்திவிட்டு வந்து கெங்க பைரம்மாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினமும் நாராயணப்பா மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் மனைவி கெங்க பைரம்மாவிடம் சாப்பாடு வைக்கும்படி கேட்டுள்ளார். அப்போது மது அருந்திவிட்டு வந்ததால், சாப்பாடு கொடுக்க கெங்க பைரம்மா மறுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நாராயணப்பா, மனைவியை அடித்து-உதைத்தார். ஆனாலும் ஆத்திரம் தீராத நாராயணப்பா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கெங்க பைரம்மாவை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ராஜனகுண்டே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விைரந்து வந்து கெங்க பைரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மனைவியை கொலை செய்ததாக நாராயணப்பா ராஜனகுண்டே போலீசில் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

Related Tags :
Next Story