கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து துண்டுப்பிரசுரம்


கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து துண்டுப்பிரசுரம்
x
தினத்தந்தி 19 March 2020 3:45 AM IST (Updated: 18 March 2020 4:56 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.

ஆம்பூர், 

ஆம்பூர் நகராட்சி சார்பில் கொரோனோ வைரஸ் நோய் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆம்பூர் பூக்கடை பஜார் பகுதியில் வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினார். 

வியாபாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என கடை, கடையாக சென்று விளக்கினார். அப்போது தாசில்தார் செண்பகவள்ளி, நகராட்சி துப்புரவு அலுவலர் பாஸ்கர் மற்றும் நகராட்சி, வருவாய் துறை அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியின்போது மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

Next Story