மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி தகராறை தடுத்த ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை + "||" + The husband-wife dispute blocked Auto driver beaten to death

கணவன்-மனைவி தகராறை தடுத்த ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை

கணவன்-மனைவி தகராறை தடுத்த ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை
கணவன்-மனைவி தகராறை தடுத்த ஆட்டோ டிரைவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
சென்னை, 

சென்னை அசோக்நகர், 83-வது தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 27). இவர் ஆன்லைன் மூலம் உணவு பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி பெயர் ஜனனி. வினோத்குமாருக்கும், ஜனனிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கும். சமீபத்தில் இருவருக்கும் சண்டை நடந்தது.

இதையொட்டி, ஜனனி கோபித்துக்கொண்டு பக்கத்து தெருவில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில், மனைவியை அழைத்து வருவதற்காக வினோத்குமார் கடந்த 27-ந் தேதி மாமனார் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக வெடித்தது. ஜனனியின் உறவினர் மாரியப்பன் (வயது 58) ஆட்டோ டிரைவர் சமாதானம் செய்துள்ளார்.

ஆனால் வினோத்குமார் ஆத்திரப்பட்டு, சமாதானம் செய்த மாரியப்பனை தாக்கியுள்ளாார். இதில் கீழே விழுந்த மாரியப்பன் காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் இறந்து போனார்.

இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.