கோட்டையூர் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்


கோட்டையூர் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்
x
தினத்தந்தி 1 April 2020 10:30 PM GMT (Updated: 2 April 2020 12:14 AM GMT)

கோட்டையூர் பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காரைக்குடி, 

கோட்டையூர் பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலர் கவிதா தலைமையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும், மக்கள் அதிகம் கூடுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீயணைப்பு துறையினருடன் இணைந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. புதிதாக அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதேபோல் சிவகங்கை ஒன்றியம் கண்டாங்கிபட்டி ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து தெருக்களிலும் ஊராட்சி மன்ற தலைவர் மந்தக்காளை தலைமையில், ஊராட்சி செயலர் சிலம்பரசன் மற்றும் ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.

இதேபோல் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கெரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தேளிக்கப்பட்டது. யூனியன் தலைவர் சித்தாணூர் சரவண மெய்யப்பன் என்ற கார்த்தி பணியை தொடங்கி வைத்தார். இதில் ஆணையாளர் அன்பு செல்வி, வட்டார மருத்துவ அலுவலர் பாஸ்கர், மேலாளர்கள் சுப்பிரமணியன், உமாராணி, காசாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story