கரூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு


கரூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 4 April 2020 10:15 PM GMT (Updated: 5 April 2020 4:00 AM GMT)

கரூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர், 

கரூர் மாவட்டத்தில் கல்லூரி விரிவுரையாளர் உள்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று கரூர் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக ரத்தபரிசோதனை அறிக்கையின்படி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் அறிவித்தார்.

பாதிக்கப்பட்ட 2 பேரும் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர்கள். ஏற் கனவே பள்ளப்பட்டியில் கொரோனாவால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் இந்த பகுதியில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர் ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பகுதிகளில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு சளி, இருமல், மூச்சுத்திணறல், காய்ச்சல் போன்றவை இருக்கிறதா? எனவும் மருத்துவக்குழுவினர் பரிசோதித்து சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் அங்கு 50 வீடுகளுக்கு, துணை கலெக்டர் நிலையிலுள்ள ஒரு அதிகாரியை நியமித்து கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனரா? என பொதுஇடங்களில் ஆங்காங்கே அதிகாரிகள் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். அவ்வாறு கடைபிடிக்க ாதவர்களுக்கு பொருள் வினியோகித்தால் கடை சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட வீதிகளில் இருப்பவர்களுக்கு போன் மூலம் ஆர்டர் செய்து உணவு பொருள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல், நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பில் இருந்தவர்கள் சிலர் இடப்பற்றாக்குறையால் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவக்குழு மூலம் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். 

Next Story