அந்தியூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 14 ஊராட்சிகளுக்கு கிருமி நாசினி - இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்


அந்தியூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 14 ஊராட்சிகளுக்கு கிருமி நாசினி - இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 8 April 2020 3:45 AM IST (Updated: 8 April 2020 1:08 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 14 ஊராட்சிகளுக்கு கிருமி நாசினிம், கைகழுவும் திரவம் உள்ளிட்ட பொருட்களை இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்.

அந்தியூர், 

கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் அந்தியூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்னதம்பிபாளையம், மைக்கேல்பாளையம், பர்கூர், கெட்டிசமுத்திரம், பச்சாம்பாளையம், கீழ்வாணி, மூங்கில்பட்டி உள்பட 14 ஊராட்சிகளுக்கு தேவையான கிருமி நாசினி, பணியாளர்களுக்கு தேவையான கையுறைகள், கைகழுவும் திரவம் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய ஆணையாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். 

அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இந்த பொருட்களை அந்தந்த ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பெற்றுக்கொண்டனர். அப்போது அவர் பேசுகையில், ‘கிருமி நாசினியை அந்தந்த ஊராட்சி பகுதிகளில் தெளித்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்கள் ஈடுபடவேண்டும். தூய்மை பணியாளர்களுக்கான கையுறைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றையும் வழங்க வேண்டும். என்ன உதவி தேவை என்றாலும் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம்,’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சண்முகவேல், ஒன்றியக்குழு தலைவர் வளர்மதி தேவராஜ், ஊராட்சி தலைவர்கள் கிருஷ்ணன், மாறன், மலையான், பானுமதி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story