சிங்கப்பெருமாள் கோவில் அருகே, தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கம்பிகள் திருட்டு


சிங்கப்பெருமாள் கோவில் அருகே, தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கம்பிகள் திருட்டு
x
தினத்தந்தி 9 April 2020 3:30 AM IST (Updated: 9 April 2020 3:17 AM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பெருமாள் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்பு கம்பிகள் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு மாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் இரும்பால் ஆன தடுப்பு வேலிகள் 4 வழிச்சாலையின் இருபுறமும் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு வேலிகளான 20-க்கும் மேற்பட்ட தடுப்பு வேலிகளை மர்ம நபர்கள் இரவோடு இரவாக திருடி சென்று விட்டனர். 

இந்த திருட்டு சம்பவத்தால், போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்தக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story