பழனி ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்


பழனி ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
x
தினத்தந்தி 4 May 2020 11:15 PM GMT (Updated: 2020-05-05T04:45:31+05:30)

பழனி ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்.

பழனி,

பழனி ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 ஊராட்சிகளிலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பழனி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் ஊராட்சிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கையுறை, முக கவசம், கிருமிநாசினி மற்றும் சோப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பழனி ஒன்றியக்குழு தலைவர் ஈஸ்வரி கருப்புசாமி தலைமை தாங்கி, ஊராட்சி அலுவலர்களுக்கு முக கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏழுமலை, நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story