தரகம்பட்டி அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


தரகம்பட்டி அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 9 May 2020 9:31 AM IST (Updated: 9 May 2020 9:31 AM IST)
t-max-icont-min-icon

தரகம்பட்டி அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தரகம்பட்டி, 

தரகம்பட்டி அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

வாலிபர் பலி

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள வரவணை ஊராட்சி, சுல்லாமணிபட்டியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் சூர்யா (வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் சுல்லாமணி பட்டியில் இருந்து சொந்த வேலை நிமிர்த்தமாக காணியாளம்பட்டிக்கு சென்றார்.

பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு, அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். தரகம்பட்டி அருகே வீரமலைப்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அப்பகுதியில் இரவு நேரத்தில் எந்தவாகனமும் செல்லாததால் யாருக்கும் தெரியவில்லை.

போலீசார் விசாரணை

இதற்கிடையில், நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, சிந்தாமணிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story