ஏற்காடு மலைப்பாதையில் காட்டுத்தீ


ஏற்காடு மலைப்பாதையில் காட்டுத்தீ
x
தினத்தந்தி 11 May 2020 10:25 AM IST (Updated: 11 May 2020 10:25 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காடு மலைப்பாதையில் காட்டுத்தீ.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. சேலத்தில் நேற்று வெயிலின் அளவு 104.5 டிகிரியாக பதிவானது. இதனால் சாலையில் அனல் காற்று வீசியதை காணமுடிந்தது. வெயிலால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்தநிலையில் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் திடீரென காட்டு தீப்பிடித்தது. அந்த தீயானது மளமளவென பரவியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனை சேலம் மக்கள் தங்களது வீடுகளிலிருந்து பார்க்க முடிந்தது. தீ இரவு முழுவதும் எரிந்தது. பகல் நேரங்களில் இளைஞர்கள் சிலர் அடிவாரம் வழியாக காட்டுப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் எனவும், பின்னர் அவர்கள் சிகரெட், பீடி துண்டுகளை வீசியிருக்கலாம். அதனால் காய்ந்த மரங்களில் தீப்பிடித்து இருக்கலாம் என்றும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வனப்பகுதியில் தீப்பிடித்து இருக்கக்கூடும் எனவும் தீயணைப்புத் துறையினர் தெரிவிக்கின்றனர். இரவு நேரம் என்பதால் தீயை அணைக்க அந்த பகுதிக்கு செல்ல முடியவில்லை. இருந்தபோதிலும் ஏற்காடு மலைப்பாதையில் இரவு நேரங்களில் பொதுமக்கள் செல்வதை தவிர்க்குமாறு வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story