மாவட்ட செய்திகள்

குடிநீர் வழங்காததை கண்டித்து குடியாத்தம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் + "||" + Civilians Struggles with Empty Pots near Gudiyatham

குடிநீர் வழங்காததை கண்டித்து குடியாத்தம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

குடிநீர் வழங்காததை கண்டித்து குடியாத்தம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
குடியாத்தம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்,

குடியாத்தம் ஒன்றியம் தட்டப்பாறை கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் மோட்டார் மற்றும் பைப்புகள் பழுதடைந்துள்ளது. இதனால் கடந்த பல தினங்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கிராம மக்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலையில் காலி குடங்களுடன் உடனடியாக குடிநீர் வழங்கக்கோரி தட்டப்பாறை கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜபத்திரி, கிராம நிர்வாக அலுவலர் குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சக்கரவர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏகாம்பரம் உள்ளிட்டோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பழுதடைந்த மோட்டார் மற்றும் பைப்புகளை உடனடியாக சீர் செய்துதர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதனையடுத்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

குடியாத்தம் ஒன்றியத்தில் பல கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வசதி இருந்தும் மோட்டர் ரிப்பேர் காரணமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் உடனடி நடவடிக்கை இல்லாத காரணத்தாலேயே தடை உத்தரவு காலத்திலும் போராட்டத்தில் ஈடுபடவேண்டி உள்ளது.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக பழுதடைந்த ஆழ்துளை கிணறுகள், பைப்புகளை போர்க்கால அடிப்படையில் சீர்செய்து சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை மும்பையில் 20 சதவீத குடிநீர் வெட்டு 5-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் மும்பையில் 5-ந்தேதி முதல் 20 சதவீத குடிநீர் வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
2. கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தகவல்
கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறியுள்ளார்.
3. திருப்பூரில் 12 இடங்களில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்; அதிகாரிகளின் பாராமுகம் ஏனோ?
தாகம் தீர்க்க தவிக்கும் பொதுமக்கள் ஒருபுறம் இருக்க, அதிகாரிகளின் பாராமுகத்தால் திருப்பூரில் 12 இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.
4. சேலம் அருகே மேட்டுப்பட்டியில் ரூ.19.17 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
சேலம் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் ரூ.19 கோடியே 17 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
5. அதியமான்கோட்டை ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
அதியமான்கோட்டை ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி.