நாமக்கல்லில் லாரி பாடி கட்டும் நிறுவனங்கள் செயல்பட தொடங்கின


நாமக்கல்லில் லாரி பாடி கட்டும் நிறுவனங்கள் செயல்பட தொடங்கின
x
தினத்தந்தி 16 May 2020 3:45 AM GMT (Updated: 16 May 2020 3:45 AM GMT)

நாமக்கல்லில் லாரி பாடி கட்டும் நிறுவனங்கள் செயல்பட தொடங்கின.

நாமக்கல்,

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சுற்று வட்டாரத்தில் மட்டும் ஏறத்தாழ 1,200 லாரி பாடிகட்டும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து லாரி பாடி கட்டும் நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வந்தனர்.

செயல்பட தொடங்கின

தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து நாமக்கல் நகரில் லாரி பாடி கட்டும் நிறுவனங்கள் மற்றும் பட்டறைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தொடங்கி உள்ளன.

இருப்பினும் ஊரடங்கால் லாரிகள் போக்குவரத்து முடங்கி இருப்பதால் வேலைவாய்ப்பு குறைவாகவே இருப்பதாகவும், ஊரடங்கு முடிவுக்கு வந்தால் மட்டுமே பணியை முழுவீச்சில் தொடங்க முடியும் என்றும் லாரி பாடி கட்டும் நிறுவனத்தினர் கூறினர்.


Next Story