மதுரை வீதிகளில் விற்பனைக்கு வந்த சிறுமலை வாழைப்பழம்


மதுரை வீதிகளில் விற்பனைக்கு வந்த சிறுமலை வாழைப்பழம்
x
தினத்தந்தி 16 May 2020 5:04 AM GMT (Updated: 16 May 2020 5:04 AM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலையில் விளையும் வாழைப்பழம் மருத்துவ குணம் கொண்டது. அங்கு விளையும் வாழைத்தார்கள் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மதுரை,

ஊரடங்கினால் சிறுமலையில் விளைந்த வாழைப்பழங்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதனால் வாகனங்கள் மூலம் மதுரை பகுதிகளுக்கு கொண்டு வந்து வீதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

மதுரை நேதாஜி ரோட்டில் வாகனம் மூலம் விற்பனையில் ஈடுபட்ட விவசாயி பாண்டி கூறும்போது, “மருத்துவ குணம் கொண்ட சிறுமலை வாழைப்பழம் பிரேசில் நாட்டிலிருந்து கொண்டு வந்த ரகத்தில் இருந்து பயிரிடப்பட்டது., தேவை அதிகம் இருப்பதால் இந்த பழத்தின் விலை சற்று அதிகம் இருக்கும். கோவில்களில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் பெரும்பாலும் இந்த பழங்களை பயன் படுத்துகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை உள்பட மாநிலத்தின் பல்வேறு சந்தைகள் பூட்டப்பட்டுள்ளன. இந்த காரணத்தால் சிறுமலை வாழைப்பழங்களை ஊர் ஊராக வாகனங்களில் கொண்டு சென்று குறைந்த விலைக்கு விற்பனை செய்துவருகிறோம்” என்று கூறினார்.

Next Story