கடலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்ல சிறப்பு பஸ்கள்


கடலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்ல சிறப்பு பஸ்கள்
x
தினத்தந்தி 20 May 2020 4:29 AM GMT (Updated: 20 May 2020 4:29 AM GMT)

கடலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலைக்கு சென்று வர இன்று (புதன்கிழமை) முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு விதிகளின்படி இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் தாங்கள் வேலை பார்க்கும் இடங்களுக்கு சென்று வர வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்கனவே 4 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 50 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் முதல் அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் வேலைக்கு சென்று வர வசதியாக 20-ந் தேதி (அதாவது இன்று) முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் அரசு ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்து, உரிய கட்டணம் செலுத்தி, பயணச்சீட்டு பெற்று பயணம் செய்யலாம்.

பஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்கள் மற்றும் நேரம் குறித்த விவரம் வருமாறு:-

கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தினசரி காலை 6, 7, 9.30 மணி மற்றும் மாலை 5.15, இரவு 7.30 மணிக்கும், புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு காலை 6.45, 8, 10.30, மற்றும் மாலை 6.15, இரவு 8.30 மணிக்கும், கடலூரில் இருந்து புதுச்சத்திரம் வழியாக சிதம்பரத்திற்கு காலை 7.40, 8.45, 11.15 மற்றும் மாலை 6 மணி, இரவு 7.10, 9.15 மணிக்கும், சிதம்பரத்தில் இருந்து கடலூருக்கு காலை 8, 9, 10.15 மற்றும் மாலை 6, இரவு 7.30, 8.15 மணிக்கும் இயக்கப்பட உள்ளது.

இதேபோல் கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டை வழியாக சிதம்பரத்துக்கு தினசரி காலை 8, 9.45, மாலை 6 மணி, இரவு 7.45 மணிக்கும், சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டை வழியாக கடலூருக்கு காலை 8, 9.45, மாலை 6 மணி, இரவு 7.45 மணிக்கும், கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு காலை 8, 9, மாலை 6, இரவு 7 மணிக்கும், பண்ருட்டியில் இருந்து கடலூருக்கு காலை 8, 9, மாலை 6, இரவு 7 மணிக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதுதவிர கடலூரில் இருந்து விருத்தாசலத்திற்கு காலை 8, 9.45, மாலை 6, இரவு 7.45 மணிக்கும், விருத்தாசலத்தில் இருந்து கடலூருக்கு காலை 8, 9.45, மாலை 6, இரவு 7.45 மணிக்கும், சிதம்பரத்தில் இருந்து பண்ருட்டிக்கு காலை 8, 10, மாலை 6, இரவு 8 மணிக்கும், பண்ருட்டியில் இருந்து சிதம்பரத்திற்கு காலை 8, 10, மாலை 6, இரவு 8 மணிக்கும், சிதம்பரத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு காலை 6 மணி, மாலை 4 மணிக்கும், விருத்தாசலத்தில் இருந்து சிதம்பரத்திற்கு காலை 8 மணி, மாலை 6 மணிக்கும், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவிலுக்கு காலை 9.55 மற்றும் இரவு 7.55 மணிக்கும், காட்டுமன்னார்கோவிலில் இருந்து சிதம்பரத்திற்கு காலை 10.45 மற்றும் இரவு 8.40 மணிக்கும், வடலூரில் இருந்து காட்டுமன்னார்கோவிலுக்கு காலை 6, மாலை 6.45 மணிக்கும், காட்டுமன்னார்கோவிலில் இருந்து வடலூருக்கு காலை 7.05, இரவு 7.50 மணிக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இதேபோல் வடலூரில் இருந்து பண்ருட்டிக்கு காலை 8.10, மாலை 4 மணிக்கும், பண்ருட்டியில் இருந்து வடலூருக்கு காலை 9.55, மாலை 5.10 மணிக்கும், காட்டுமன்னார்கோவிலில் இருந்து ஸ்ரீமுஷ்ணத்துக்கு காலை 8, 9.15, மாலை 6, இரவு 7.15 மணிக்கும், ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து காட்டுமன்னார்கோவிலுக்கு காலை 8, 9.15, மாலை 6, இரவு 7.15 மணிக்கும், விருத்தாசலத்தில் இருந்து வேப்பூருக்கு காலை 8, 8.30, 10.20, மாலை 6, இரவு 8.20 மணிக்கும், வேப்பூரில் இருந்து விருத்தாசலத்திற்கு காலை 8, 10.15, 10.35, மாலை 6, இரவு 8.15 மணிக்கும், விருத்தாசலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு காலை 7.10 மற்றும் மாலை 6.10 மணிக்கும், உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலத்திற்கு காலை 7.50 மற்றும் மாலை 6.50 மணிக்கும் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story