போக்குவரத்து நெரிசலை குறைக்க ஈரோடு மேம்பாலம் திறக்கப்பட்டது


போக்குவரத்து நெரிசலை குறைக்க ஈரோடு மேம்பாலம் திறக்கப்பட்டது
x
தினத்தந்தி 20 May 2020 11:04 AM IST (Updated: 20 May 2020 11:04 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் நேற்று முன்தினம் முதல் ஊரடங்கு விதிமுறைகள் பெருமளவு தளர்த்தப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டது.

ஈரோடு, 

கொரோனா ஊரடங்குக்காக ஈரோடு மேம்பாலம் மூடப்பட்டு இருந்தது. வாகனங்களை கண்காணிக்கவும், போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு இருந்தனர். 

தற்போது மாவட்டத்துக்குள் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு தளர்வு செய்யப்பட்டதால் கடந்த 2 நாட்களாக அரசு ஆஸ்பத்திரி பகுதியில் நெரிசல் அதிகரித்தது. அதைத்தொடர்ந்து நேற்று மேம்பாலம் திறக்கப்பட்டது. 

இதனால் பெருந்துறை ரோட்டில் இருந்து பன்னீர்செல்வம் பூங்கா செல்பவர்கள், ரெயில் நிலையம் செல்பவர்கள் மேம்பாலம் வழியாக பயணித்தனர். இதுபோல் பன்னீர்செல்வம் பூங்கா ரோட்டில் இருந்து பெருந்துறை ரோடு செல்பவர்களும் மேம்பாலத்தின் வழியாக சென்றனர். இதனால் சற்று போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

Next Story