மாவட்ட செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து 2 ஆயிரம் பேர் மும்பை அழைத்து வரப்பட்டனர்முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தகவல் + "||" + 2 thousand were brought to Mumbai Uthav Thackeray Information

வெளிநாடுகளில் இருந்து 2 ஆயிரம் பேர் மும்பை அழைத்து வரப்பட்டனர்முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தகவல்

வெளிநாடுகளில் இருந்து 2 ஆயிரம் பேர் மும்பை அழைத்து வரப்பட்டனர்முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தகவல்
வெளிநாடுகளில் இருந்து 1,972 பேர் மும்பைஅழைத்து வரப்பட்டனர்என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை,

கொரோனா வைரஸ் பரவும் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை ‘வந்தே பாரத் மிஷன்’் என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வருகிறது. இதன் மூலம் மராட்டியத்தை சேர்ந்தவர்களும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியுள்ளனர்.


இது குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

10 நாடுகளில் தவித்த 1,972 இந்தியர்கள் 13 சிறப்பு விமானங்களில் மும்பை அழைத்து வரப்பட்டனர். இவர்களில் லண்டனில் இருந்து 653 பேரும், சிங்கப்பூரில் இருந்து 243 பேரும், மணிலாவில் இருந்து 150 பேரும், சான் பிரான்சிஸ்கோ மற்றும் டாக்காவில் இருந்து தலா 107, நியூயார்க்கில் இருந்து 208, கோலாலம்பூரில் இருந்து 201, சிகாகோவில் இருந்து 195, குவைத்தில் இருந்து 2, அடிஸ்அபபாவில் இருந்து 78, காபூலில் இருந்து 12, மஸ்கட்டில் இருந்து 16 பேரும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களில் 822 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். 1,025 பேர் மராட்டியத்தின் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள். 125 பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

மும்பையை சேர்ந்தவர்களும், மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் மும்பையில் உள்ள ஓட்டல்களிலும், மராட்டியத்தின் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள ஓட்டல்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் தவிப்பவர்களை அழைத்து கொண்டு மேலும் 27 விமானங்கள் மும்பை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.