கூத்தாநல்லூர் அருகே வாய்க்கால் மதகு கட்டும் பணி கலெக்டர் ஆனந்த் ஆய்வு
கூத்தாநல்லூர் அருகே வாய்க்கால் மதகு கட்டும் பணியை கலெக்டர் ஆனந்த் ஆய்வு செய்தார்.
கூத்தாநல்லூர்,
கூத்தாநல்லூர் அருகே வாய்க்கால் மதகு கட்டும் பணியை கலெக்டர் ஆனந்த் ஆய்வு செய்தார்.
வாய்க்கால் மதகு
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள அன்னுக்குடியில் ரூ.20 லட்சம் மதிப்பில் வாய்க்கால் மதகு, கதவணை மற்றும் பாதுகாப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் ஆனந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகளின் தேவை அறிந்து முதல்-அமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தூர்வாரும் திட்ட பணிகள், குடிமராமத்து திட்ட பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
தூர்வாரும் திட்டம்
தூர்வாரும் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் 106 பணிகள் ரூ.22 கோடியே 56 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் நடைபெற உள்ளது. அன்னுக்குடி வாய்க்காலில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மதகு, கதவணை மற்றும் பாதுகாப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, உதவி செயற்பொறியாளர்கள் சீனிவாசன், சிதம்பரநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story