திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் சுகாதார பணியாளர்கள் மீது உறுப்பினர்கள் புகார்


திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் சுகாதார பணியாளர்கள் மீது உறுப்பினர்கள் புகார்
x
தினத்தந்தி 21 May 2020 1:41 AM GMT (Updated: 21 May 2020 1:41 AM GMT)

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

எலச்சிபாளையம், 

 ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் துணைத்தலைவர் ராஜவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், பரமசிவன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் செல்லப்பன், அருள்செல்வி மற்றும் உறுப்பினர்கள் 14 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு பணியாளர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களிடம் தகவல் ஏதும் கூறாமல் அந்தந்த பகுதிகளுக்கு சென்று கிருமி நாசினி தெளித்தல், தண்ணீருக்கு மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை கவனித்து வருவதாக கூறுகின்றனர். ஆனால் சுகாதார பணியாளர்கள் கிராம பகுதிகளுக்கு வந்தார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரிய வருவதில்லை என்று ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். 

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால், இனி கிருமி நாசினி தெளிக்கும் பணியாளர்கள் கிராமங்களுக்கு சென்று வேலை செய்யும்போது அந்தந்த பகுதி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டார். 

பின்னர் பல்வேறு கிராமங்களில் பல்வேறு பணிகள் தொடர்பான சுமார் 80-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவர் சுஜாதா, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்படாமல் பணியாற்றிய அலுவலர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Next Story