பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்


பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 21 May 2020 11:01 PM GMT (Updated: 21 May 2020 11:01 PM GMT)

பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறினார்.

தஞ்சாவூர்,

பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் வழங்கல் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செயற் பொறியாளர் (ஊரக வளர்ச்சி) உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர்கள், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை, செயற்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி இயக்குனர், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர்கள், மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தடையின்றி குடிநீர்

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கோடைகாலத்தில் ஊரக மற்றும் நகர் புறம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்க வேண்டும். குடிநீர் ஆதாரங்களில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்கி அதன்மூலம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஜல ஜுவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் தனி நபர் குடிநீர் இணைப்பு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் குடிநீர் தடையின்றி வழங்கிடவும், தடையில்லா மின்சாரம் வழங்குவதை கண்காணிக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக வாட்ஸ் அப் குழு உருவாக்கி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story