மாவட்ட செய்திகள்

வெளி மாநிலங்களில் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பியதிருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி + "||" + Returning hometown to work in outer states Corona affirms 3 persons from Thiruvarur district

வெளி மாநிலங்களில் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பியதிருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி

வெளி மாநிலங்களில் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பியதிருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி
வெளி மாநிலங்களில் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பிய திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர், 

வெளி மாநிலங்களில் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பிய திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சொந்த ஊர் திரும்பினர்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் நலன் கருதி ஊரடங்கு உத்தரவில் இருந்து பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் வெளி மாநிலத்தில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு திருப்பி அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதில் வெளி மாநிலங்களில் பணியாற்றி வந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் தற்போது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் திருவாரூர் அருகே நீலக்குடியில்் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்துதல் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

3 பேருக்கு கொரோனா உறுதி

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வகத்தில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்த திருவாரூர் மாவட்டம் எடையூர் பகுதியை சேர்ந்த வீரமணி, ஒடிசாவில் சிவில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்த எடையூரை சேர்ந்த சரவணன், மும்பையில் தையல்காரராக பணியாற்றி வந்த நன்னிலம் பகுதியை சேர்ந்த அந்தோணி ஆகிய 3 பேரும் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து 3 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில்் தற்போது புதிதாக 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.