கடற்கரையில் ரூ.15 கோடியில் நடைபாதை அமைக்கும் பணி; அமைச்சர் கந்தசாமி ஆய்வு
புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. ஒயிட் டவுன் எனப்படும் கடற்கரையையொட்டி உள்ள பகுதியில் ஏற்கனவே இருந்த தரை தளம் பெயர்த்தெடுக்கப்பட்டு புதிதாக தளம் அமைக்கப்பட்டது.
புதுச்சேரி,
கடற்கரை சாலையை அழகுபடுத்துவது, மின் விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்தன.
இந்தநிலையில் புதுவை கடற்கரை ஓரத்தில் பழைய துறைமுகம் அருகில் இருந்து வம்பாகீரப்பாளையம் முகத்துவாரம் வரை ரூ.15 கோடியில் நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
இதற்கான பணிகள் தொடங்குவது குறித்து அந்த பகுதிகளை அமைச்சர் கந்தசாமி நேற்று மாலை அங்கு சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது அன்பழகன் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டர் அருண், துறைமுக பொறியாளர் ஜெகஜோதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story