தர்மபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 May 2020 6:37 AM IST (Updated: 23 May 2020 6:37 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட கிளை சார்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி,  

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட கிளை சார்பில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நல்லம்பள்ளியில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமையிலும், பாலக்கோட்டில் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் காவேரி, குணசேகரன் ராஜா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். 

இதேபோல் தர்மபுரி, அரூர், தென்கரைக்கோட்டை ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் நல சட்டங்களில் திருத்தம் செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

அரசு ஊழியர்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை கைவிடவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story