பணி நேர அதிகரிப்பு முடிவை கைவிடக்கோரி கருப்பு சின்னம் அணிந்து பணிபுரிந்த அஞ்சலக ஊழியர்கள் மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


பணி நேர அதிகரிப்பு முடிவை கைவிடக்கோரி  கருப்பு சின்னம் அணிந்து பணிபுரிந்த அஞ்சலக ஊழியர்கள்  மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 23 May 2020 2:53 AM GMT (Updated: 23 May 2020 2:53 AM GMT)

பணி நேர அதிகரிப்பு முடிவை கைவிடக்கோரி கருப்பு சின்னம் அணிந்தபடி பணிபுரிந்தனர். இதேபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் தபால் நிலையம் உள்ளிட்ட அலுவலகங்களில் 700-க்கும் மேற்பட்டோர் கருப்பு அட்டையுடன் பணியாற்றினார்.

திருப்பூர்.

மத்திய அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோரிக்கைகள் அடங்கிய கருப்பு சின்னம் அணிந்து பணி புரிந்தனர்.

இதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் தபால் நிலையம், வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்கள் கருப்பு சின்னம் அணிந்து பணியாற்றினர்.

கிராமிய அஞ்சல் ஊழியர்கள, மத்திய அரசு ஊழியர்கள, ஓய்வு பெற்ற ஊழியர் களுக்கான பஞ்சப்படி முடக்கத்தை ரத்து செய்யவேண்டும், தொழிலாளர் நலச் சட்டத்தை திருத்த கூடாது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, ஊழியர்களின் பணி நேர அதிகரிப்பு முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் கருப்பு சின்னம் அணிந்திருந்தனர்.

700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சம்மேளனத்தை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் கருப்பு சின்னம் அணிந்து பணியாற்றினார். அதில் அகில இந்திய எதிர்ப்பு நாள் எனவும், கோரிக்கைகள் அடங்கிய வாசகமும் இடம் பெற்றிருந்தது.

காலை முதல் மாலை வரை ஊழியர்கள் கருப்பு சின்னத்தை அணிந்திருந்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று தபால் நிலையம் மற்றும் மத்திய அரசு அலுவலகத்தை சேர்ந்த ஊழியர்கள் 700-க்கும் மேற்பட்டோர் கருப்பு சின்னத்துடன் பணியில் ஈடுபட்டனர்.

Next Story