சூதாடிய 9 பேர் கைது


சூதாடிய 9 பேர் கைது
x

மிடுதேப்பள்ளி பகுதியில் சூதாடியதாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூர்,

பேரிகை போலீசார் மிடுதேப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியதாக அதே ஊரை சேர்ந்த ஆனந்த் (வயது 39), முனிராஜ் (39), பேரிகை சதாம் (35), அண்ணா நகர் ஆஞ்சப்பா (48), பேரிகை உமாசங்கர் (30) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதே போல பன்னப்பள்ளி ஏரி பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக பேரிகை வெற்றிலைக்கார தெரு சிவா (24), ஜோகு தெரு கார்த்திக் (28), சந்தோஷ் (25), ரகுநாத் (27) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story