நாங்குநேரி அருகே டிராக்டரில் ரேஷன் பொருள் ஏற்றியதை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு
நாங்குநேரி அருகே லாரியில் இருந்து டிராக்டருக்கு ரேஷன் பொருள் ஏற்றியதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாங்குநேரி,
நாங்குநேரி அருகே லாரியில் இருந்து டிராக்டருக்கு ரேஷன் பொருள் ஏற்றியதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரேஷன் பொருள்
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்துள்ள வாகைகுளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைக்கு நாங்குநேரியில் இருந்து மாதம் தோறும் லாரியில் பொருட்கள் ஏற்றிச் செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள கடைக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட சிறிய விபத்தில் தொடர்ந்து ஊருக்குள் இருக்கும் கடைக்கு லாரி செல்வது தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து அங்குள்ள நெடுஞ்சாலையோரம் ரேஷன் பொருள் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி இருந்து டிராக்டர் மூலம் அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட மூடைகளை கடையில் ஒப்படைத்துள்ளனர். இதற் கான கூடுதல் செலவுகளை அப்பகுதியினர் கொடுத்து வந்துள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தபோது சிறிய வாகனம் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளனர். அதன்பின் அவ்வாறு ஏதும் செய்யாததால் மீண்டும் நெடுஞ்சாலையில் இருந்து பொருட்களை ஏற்றிச் சென்று வரும் பணி தொடர்ந்து நடந்து மேற்கொண்டனர்.
பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்
இந்த நிலையில் நேற்று வாகைகுளம் ரேஷன் கடைக்கு பொருட்கள் ஏற்றி வந்த லாரி வழக்கம் போல நெடுஞ்சாலையில் நின்று டிராக்டர் மூலம் பொருட்களை மாற்றி ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது வந்த பொதுமக்கள் சிலர் அவ்வாறு ஏற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதனை தொடர்ந்து அங்கு வந்த நாங்குநேரி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் லாரி ஊருக்குள் சென்று நேரடியாக கடையில் பொருட்களை இறக்கிச் சென்றது. இச்சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story