தொண்டாமுத்தூர் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கொரோனா நிவாரண கடனுதவி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
தொண்டாமுத்தூர், பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொரோனா நிவாரண கடனுதவியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோவை,
தொண்டாமுத்தூர், பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொரோனா நிவாரண கடனுதவியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
சுழல்நிதி, வங்கிக்கடன்
கோவை அருகே தொண்டாமுத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட தீத்திபாளையம், மாதம்பட்டி ஆகிய ஊராட்சிகள், மதுக்கரை பேரூராட்சிக்குட்பட்ட அறிவொளிநகர் ஆகிய இடங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3.65 லட்சம் மதிப்பிலான சுழல்நிதி, வங்கிக்கடன் மற்றும் கொரோனா சிறப்புக் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கினார்.
இதில்தீத்திபாளையம் ஊராட்சியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிலிருந்து 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழிற்கடன் ரூ.1.20 லட்சம், 2 நபர்களுக்கு தனிநபர் கடன் ரூ.10 ஆயிரம், 1 குழுவிற்கு கோவிட்19 சிறப்புக் கடன் ரூ.50 ஆயிரம் ஆகியவை வழங்கப்பட்டன.
கிராம வறுமை ஒழிப்பு சங்கம்
அதேபோல் மாதம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிலிருந்து தொழிற்கடன் 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.20 லட்சமும், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலம் 5 நபர்களுக்கு ரூ.25 ஆயிரமும் கடனாக வழங்கப்பட்டன. மேலும் மதுக்கரை பேரூராட்சிக்குட்பட்ட அறிவொளிநகரில் உள்ள 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு எட்டிமடை கே.சண்முகம் எம்.எல்.ஏ., தொண்டாமுத்தூர் ஒன்றிய குழு தலைவர் வி.மதுமதி விஜயகுமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் திட்ட இயக்குனர் கு.செல்வராசு மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சி.ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story