வயலில் பூப்பறித்தபோது மின்னல் தாக்கி இளம்பெண் பலி


வயலில் பூப்பறித்தபோது மின்னல் தாக்கி இளம்பெண் பலி
x
தினத்தந்தி 1 Jun 2020 11:59 PM GMT (Updated: 1 Jun 2020 11:59 PM GMT)

வயலில் பூப்பறித்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி பெண் பலியானார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருவூர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் பத்துராஜ் (வயது 36). இவரது மனைவி கோமளவள்ளி (32). இவர்களுக்கு வித்யா (12),மோனிகா (10), சர்விகா (3) என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

கணவன், மனைவி இருவரும் தங்களது நிலத்தில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தினர். நேற்று திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

அப்போது கோமளவள்ளி வயலுக்குச் சென்று பூப்பறித்துக்கொண்டிருந்தபோது அவரை மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கோமளவள்ளி உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

Next Story