கோவை மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கோவையில் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
கோவை,
கோவை மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கோவையில் உள்ள ஆர்.எஸ்.புரம், மத்தம்பாளையம், கோவில்பாளையம் ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.அதன்படி ஆர்.எஸ்.புரம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, லாலி ரோடு, டிபி ரோடு, கவுலிபிரவுன் சாலை, டி.பி. ரோடு, சம்பந்தம் ரோடு, மெக்ரிக்கர் ரோடு, சுக்ரவார் பேட்டை, தியாகி குமரன் வீதி, லைட்ஹவுஸ் ரோடு, பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், தெலுங்கு வீதி, ராஜவீதி, பெரியக்கடைவீதி, இடையர் வீதி, சுண்டபாளையம் ரோடு, பூ மார்க்கெட், லிங்கப்ப செட்டி வீதி, ஆர்.ஜி. வீதி, காமராஜபுரம், சிரியன் சர்ச் ரோடு, கிருஷ்ணசாமி ரோடு.
மத்தம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மத்தம்பாளையம், தண்ணீர்பந்தல், பெரிய மத்தம்பாளையம், திருமலை நாயக்கன் பாளையம், சாந்திமேடு, சின்னமத்தம்பாளையம், செல்வபுரம், பாரதிநகர், மட்டபாறை.
கோவில்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சர்க்கார் சாமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம்பாளையம், அய்யம்பாளையம், அக்ரஹார சாமக்குளம், கோட்டைபாளையம், கொண்டயம்பாளையம், குன்னத்தூர், காளிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று மின்வாரியத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story