எழும்பூர் கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரருக்கு கொரோனா


எழும்பூர் கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Jun 2020 6:24 AM IST (Updated: 11 Jun 2020 6:24 AM IST)
t-max-icont-min-icon

எழும்பூர் 5-வது பெருநகர குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


சென்னை,

எழும்பூர் கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் இருந்து வரும் சக போலீஸ்காரர்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்கள் மத்தியில் இந்த தகவல்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு இருந்து வருகிறது.

இதன்காரணமாக கோர்ட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு முழுமையாக கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

Next Story