திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் 28 ஏரிகளை புனரமைக்கும் பணி


திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் 28 ஏரிகளை புனரமைக்கும் பணி
x
தினத்தந்தி 11 Jun 2020 5:08 AM GMT (Updated: 11 Jun 2020 5:08 AM GMT)

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் 28 ஏரிகளை புனரமைக்கும் பணிகளை குமரகுரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

அரசூர்,

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் நிலவள, நீர்வள திட்டத்தின் கீழ் 28 கிராமங்களில் உள்ள ஏரிகளை ரூ.12 கோடியே 25 லட்சம் மதிப்பில் தூர்வாரி புனரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திருப்பதி திருமலை தேவஸ்தான போர்டு அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு கலந்துகொண்டு காரப்பட்டு, திருமுண்டீச்சரம், சரவணம்பாக்கம், பெரியசெவலை, பேரங்கியூர், கண்ணாரம்பட்டு, இருவேல்பட்டு, மேல்தனியாலம்பட்டு, கொத்தனூர், மணக்குப்பம், தடுத்தாட்கொண்டூர், மழையம்பட்டு, சிறுவானூர், டி.சாத்தனூர், மேலமங்கலம், சித்தலிங்கமடம் உள்பட 28 கிராமங்களில் உள்ள ஏரிகளை தூர்வாரி புனரமைக்கும் பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

இதில் விழுப்புரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர், உதவி செயற்பொறியாளர் அன்பரசன், பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ராமலிங்கம், அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், திருவெண்ணெய்நல்லூர் கூட்டுறவு சங்க தலைவர் காண்டீபன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜகோபால்,

மாநில கூட்டுறவு சர்க்கரை இணைய இயக்குனர் பாக்யராஜ், ஒன்றிய இணை செயலாளர் சிவகாமி முருகதாஸ், முன்னாள் கவுன்சிலர் அறிவு என்கிற குமாரசாமி, கூட்டுறவு வங்கி செயலாளர் தென்மங்கலம் வீரமணி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ். மணி, கூட்டுறவு சங்க தலைவர் மோகன், ஆடிட்டர் ராஜீவ்காந்தி, முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முருகன், வக்கீல் அரசூர் சிவா, பிரேம்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story