மணப்பாறை அருகே குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பீறிட்டு எழுந்த தண்ணீர்
மணப்பாறை அருகே குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் பீறிட்டு எழுந்து வீணானது.
மணப்பாறை,
கரூர் மாவட்டம், குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி, மருங்காபுரி ஆகிய பகுதிகளுக்கு ராட்சத குழாய் மூலம் காவிரி தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை மணப்பாறையை அடுத்த கலிங்கபட்டி அருகே உள்ள காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் பீறிட்டு எழுந்தது.
இதுகுறித்து அப்பகுதிமக்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மோட்டாரை நிறுத்தியதை தொடர்ந்து தண்ணீர் வெளியேறுவது சுமார் 1½ மணி நேரத்திற்கு பின்னர் நின்றது.
ஆனந்த குளியல்
இருப்பினும் மாகாளிப்பட்டியில் உள்ள காவிரி குடிநீர் குழாயில் தண்ணீர் வெளியேறிக் கொண்டே இருந்தது. இதைப்பார்த்த அப்பகுதிமக்கள் அந்த தண்ணீரில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். 2 இடங்களிலும் லட்சக்கணக் கான லிட்டர் காவிரி தண்ணீர் வீணாக வெளியேறியது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவம் இனிமேலும் நடைபெறாவண்ணம் பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story