மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + The price of gasoline and diesel Condemning the rise Demonstration of the Communist Party of India

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி, 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடியில் 14-வது வார்டு வி.எம்.கோவில் தெருவில் கட்டுமான கிளை செயலாளர் ரத்தினம் தலைமையிலும், 12-வது வார்டு பூபாலராயர்புரம் கருப்பட்டி சொசைட்டி அருகில் கிளை செயலாளர் பொன்னுவேல் தலைமையிலும், தாளமுத்து நகர் மெயின் ரோட்டில் கிளை செயலாளர் அந்தோணி சவுந்தரராஜன் தலைமையிலும், ஹார்பார் கிளை சார்பாக பீச் ரோடு சுங்கத்துறை அலுவலகம் அருகே பாலசிங் தலைமையிலும், போல்டன்புரம் மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன் தலைமையிலும், காமராஜர் சாலையில் கிளை செயலாளர் ஜீவா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டங்களில் மாநகர செயலாளர் ஞானசேகர், துணை செயலாளர் மாடசாமி, கலைமாமணி கைலாசமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் முனியசாமி, மாநகர குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு அக்கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் சரோஜா தலைமை தாங்கினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பரமராஜ், நகர துணை செயலாளர் முனியசாமி, நகர குழு உறுப்பினர் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன்பு, தட்சிணாமூர்த்தி கோவில் அருகில், கிருஷ்ணன்கோவில் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எட்டயபுரம்

எட்டயபுரம் மேலவாசல் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் நல்லையா, தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏரல்

ஏரல் காந்தி சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் அம்பிகா, மாவட்ட குழு உறுப்பினர்கள் கோபால், சிவமணி, தாலுகா குழு உறுப்பினர்கள் சேகர், மாரிமுத்து, ஆண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மணல் லாரி உரிமையாளர்கள் மாதிரி பட்ஜெட், அல்வா தயாரித்து போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாதிரி பட்ஜெட், அல்வா தயாரித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்வு
பெட்ரோல் விலையில், 14-வது நாளாக எந்த மாற்றமும் இல்லை. டீசல் விலை 10 காசுகள் உயர்ந்துள்ளது.
3. 13-வது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை
4. பெட்ரோல், டீசல் விலையில் இன்று (ஜுலை10) எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல் விலை 12-வது நாளாக எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.
5. பெட்ரோல், டீசல் விலையில் இன்று(ஜுலை 9) எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றது.