இன்று காய்கறி கடைகள் அடைப்பு எதிரொலி: திருமழிசை மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தன


இன்று காய்கறி கடைகள் அடைப்பு எதிரொலி: திருமழிசை மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தன
x
தினத்தந்தி 20 Jun 2020 11:30 PM GMT (Updated: 20 Jun 2020 11:05 PM GMT)

காய்கறி கடைகள் இன்று அடைக்கப்படும் என்பதால், திருமழிசை மார்க்கெட்டில் காய்கறி விலை வெகுவாக குறைந்தது. மேலும், மாதவரத்தில் இயங்கி வரும் தற்காலிக பழக்கடைகளிலும் விற்பனை குறைவாக இருந்தது.

சென்னை, 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததன் காரணமாக கடந்த மே 5-ந் தேதி மார்க்கெட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 11-ந் தேதி முதல் கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வந்த காய்கறி கடைகள் திருமழிசைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதேபோன்று கோயம்பேட்டில் இயங்கி வந்த பழக்கடைகள் மாதவரம் புதிய பஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டன.

இந்த நிலையில், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீவிர முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

தீவிர முழு ஊரடங்கின்போது மளிகை மற்றும் காய்கறி கடைகளும் அடைக்கப்படும். எனவே, நேற்று திருமழிசைக்கு காய்கறி வாங்கச் சென்ற வியாபாரிகள் நேற்றைய தேவைக்கு மட்டுமே காய்கறிகளை வாங்கிச் சென்றனர். ஆனால், காய்கறி வரத்து வழக்கம்போல் இருந்ததால், காய்கறி விலை வெகுவாக குறைந்து காணப்பட்டது.

விற்பனை குறைவு

திருமழிசை தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் நேற்றை காய்கறி விலை (1 கிலோவிற்கு) வருமாறு:

நாட்டுத் தக்காளி 20 முதல் 26 ரூபாய், நவின் தக்காளி 20 முதல் 25 ரூபாய். வெங்காயம் ரூ.8 முதல் ரூ.13, உருளை கிழங்கு ரூ.22 முதல் ரூ.24, சாம்பார் வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40, ஊட்டி கேரட் ரூ.15 முதல் ரூ.20, பீன்ஸ் ரூ.25 முதல் ரூ.30, ஊட்டி பீன்ஸ் ரூ.30 முதல் ரூ.40, பீட்ரூட் ரூ.16 முதல் ரூ.18, ஊட்டி பீட்ரூட் ரூ.15 முதல் ரூ.20, ஊட்டி சவ் சவ் ரூ.8 முதல் ரூ.10, முள்ளங்கி ரூ.5 முதல் ரூ.8, முட்டை கோஸ் ரூ.9 முதல் ரூ.10, வெண்டைக்காய் ரூ.15 முதல் ரூ.20, கத்தரிக்காய் ரூ.10 முதல் ரூ.20, பாவக்காய் ரூ.20 முதல் ரூ.25, கோவைக்காய் ரூ.13 முதல் ரூ.15, சுரைக்காய் ரூ.10 முதல் ரூ.15, முருங்கைக்காய் ரூ.20 முதல் ரூ.25, வெள்ளரிக்காய் ரூ.12 முதல் ரூ.15, சேனைக்கிழங்கு ரூ.18 முதல் ரூ.20, பச்சை மிளகாய் ரூ.8 முதல் ரூ.10, இஞ்சி ரூ.65 முதல் ரூ.70, அவரைக்காய் ரூ.15 முதல் ரூ.20, பூசனிக்காய் ரூ.5, எலுமிச்சம் பழம் ரூ.20, வாழைக்காய் ரூ.5 முதல் ரூ.7, மல்லி இலை(கட்டு) ரூ.6, புதிய இலை(கட்டு) ரூ.4, கருவேப்பிலை(கட்டு) ரூ.20, கீரை வகைகள்(கட்டு) ரூ.3

இதேபோன்று மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் பழக்கடைகளிலும் வியாபாரிகள் குறைந்த அளவிலான பழங்களையே வாங்கிச் சென்றதால், பழங்கள் விற்பனை குறைவாக இருந்தது.

Next Story