திருப்பத்தூரில், வியாபாரி வீட்டில் திருட்டு


திருப்பத்தூரில், வியாபாரி வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 22 Jun 2020 3:15 AM IST (Updated: 22 Jun 2020 10:04 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் வியாபாரி வீட்டில் நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் டவுன் ஹவுசிங் போர்டு பகுதி 2-ல் வசிப்பவர் பாஸ்கர் (வயது 33), பிஸ்கெட் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான செவ்வாத்தூர் கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்று உள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று பாஸ்கர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 5 பவுன் நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story