மாவட்ட செய்திகள்

தனிநபர் பழக்க, வழக்கமே கொரோனா பரவலுக்கு காரணம் - கவர்னர் கிரண்பெடி வேதனை + "||" + Personal habits and customary coronal dispersion - Governor kiranpeti pain

தனிநபர் பழக்க, வழக்கமே கொரோனா பரவலுக்கு காரணம் - கவர்னர் கிரண்பெடி வேதனை

தனிநபர் பழக்க, வழக்கமே கொரோனா பரவலுக்கு காரணம் - கவர்னர் கிரண்பெடி வேதனை
புதுவையில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு தனிநபர் பழக்க, வழக்கமே முக்கிய காரணம் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார். கவர்னர் கிரண்பெடி நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விவரங்களை பார்க்கும் போது முதல் 81 நாட்களில் 100 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 2-வது 10 நாட்களில் 100 நபர்கள் பாதிக்கப்பட்டனர். 3-வது 5 நாட்களில் 100 பேர் என பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தனிப்பட்ட பொறுப்பான நடத்தை மட்டுமே பரவலின் வேகத்தை தடுக்க முடியும்.

கொரோனா தொற்று இதே வேகத்தில் பரவினால் புதுச்சேரியில் மக்கள் அனைவரும் கடினமான சூழலில் இருப்போம். கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவ தனிநபர் பழக்க வழக்கமே முக்கிய காரணம். சிலர் முகக்கவசம் சரியாக பயன்படுத்துவதில்லை. பலரும் கைக்குட்டையை முககவசமாக பயன்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவறு. கைக்குட்டை முகக் கவசமாகாது.

பொது இடத்தில் வந்து பேசும்போது முகக் கவசம் அணியாமல் இருப்பது மிகப்பெரிய தவறு. எனவே, வெளியில் செல்லும்போது நாம் கட்டாயமாக முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியில் சென்று திரும்பிய உடன் கை, கால்களை சோப்பு போட்டு கழுவி சுத்தமாக இருப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். இதன் மூலமாக நாம் சுகாதாரத்தை பாதுகாக்க முடியும். நமது ஒன்றிணைந்த முயற்சிகளால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுவையில் 4-ந்தேதி முதல் நடக்க இருந்த காவலர் தேர்வு திடீர் நிறுத்தம் - கவர்னர் கிரண்பெடி அதிரடி உத்தரவு
புதுவையில் வருகிற 4-ந்தேதி முதல் நடைபெற இருந்த காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கவர்னர் கிரண்பெடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். புதுவை காவல் துறை பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
2. கொரோனா தடுப்பு பணி: கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுடன் ஆலோசனை
புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுடன் நேற்று சுமார் 4 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
3. கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் கவர்னர் கிரண்பெடி திடீரென ஆய்வு - அதிகாரிகளிடம் சராமாரி கேள்வி
கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் கவர்னர் கிரண்பெடி திடீரென ஆய்வு செய்து அங்கிருந்த அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
4. கவர்னர் கிரண்பெடி இருக்கும் வரை 100 ஆண்டுகள் ஆனாலும் பாரதீய ஜனதா வளராது - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேட்டி
கவர்னர் கிரண்பெடி இருக்கும் வரை புதுவையில் 100 ஆண்டுகள் ஆனாலும் பாரதீய ஜனதா வளராது என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
5. ஒருங்கிணைந்து தடுக்காவிட்டால் கொரோனா பாதிப்பு தினமும் 100 ஆக மாறும் - கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்
ஒருங்கிணைந்து செயல்பட்டு தடுக்காவிட்டால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் 100 ஆக மாறும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை