மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசியதை தாய் மாமா கண்டித்ததால்கல்லூரி மாணவி தற்கொலை + "||" + mother-in-law denounced talking on cellphone College student suicide

செல்போனில் பேசியதை தாய் மாமா கண்டித்ததால்கல்லூரி மாணவி தற்கொலை

செல்போனில் பேசியதை தாய் மாமா கண்டித்ததால்கல்லூரி மாணவி தற்கொலை
செல்போனில் அதிகநேரம் பேசியதை தாய் மாமா கண்டித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலந்தூர், 

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் துரைராஜ் தெருவைச் சேர்ந்தவர் மதுமிதா(வயது 21). கல்லூரி மாணவி. மதுமிதா, அவரது தம்பி இருவரையும் தாய் மாமா சரவணன் என்பவர் வீட்டில் வளர்த்து வந்தனர்.

மதுமிதா, எப்போதும் செல்போனிலேயே அதிகநேரம் பேசி வந்ததாகவும், இதனை சரவணன் கண்டித்ததுடன், அவரிடம் இருந்து செல்போனை பறித்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த மதுமிதா, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், ஈஸ்வரன் நகர், 10-வது தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (22). கடந்த 5-ந் தேதி இவரது நெருங்கிய நண்பர் ஒருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். அன்று முதல் விக்னேஸ்வரன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவையில், கல்லூரி மாணவி தற்கொலை - காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீதம்
கோவையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.