ஒருதலை காதலால் விபரீதம்: சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்


ஒருதலை காதலால் விபரீதம்: சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்
x
தினத்தந்தி 1 July 2020 5:18 AM IST (Updated: 1 July 2020 5:18 AM IST)
t-max-icont-min-icon

சிறுமி மீது ஒருதலை காதல், பெற்றோர் கண்டித்ததால்இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி மீது ஜன்னல் வழியாக கொதிக்கும் எண்ணெயை ஊற்றிவிட்டு தப்பிச்சென்றார்.

பாகூர்,

பாகூர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 19). இவர் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்தார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், மாதேசை கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி மீது ஜன்னல் வழியாக கொதிக்கும் எண்ணெயை ஊற்றிவிட்டு தப்பிச்சென்றார்.

இதில் சிறுமியின் கை, முகம், கழுத்து பகுதி வெந்து கொப்பளம் ஏற்பட்டது. வலியில் துடித்த சிறுமியை அவரது பெற்றோர் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மாதேசை கைது செய்தனர். ஒருதலை காதல் விவகாரத்தில் சிறுமி மீது வாலிபர் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story