போலி ஆவணங்கள் மூலம் சொத்து மோசடி வழக்கு: ரூ.25 லட்சத்தை மனநலம் குன்றியவரின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்


போலி ஆவணங்கள் மூலம் சொத்து மோசடி வழக்கு: ரூ.25 லட்சத்தை மனநலம் குன்றியவரின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்
x
தினத்தந்தி 1 July 2020 11:54 PM GMT (Updated: 1 July 2020 11:54 PM GMT)

போலி ஆவணங்கள் மூலம் சொத்து மோசடி வழக்கு: ரூ.25 லட்சத்தை மனநலம் குன்றியவரின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்

மதுரை

போலி ஆவணங்கள் மூலம் சொத்து மோசடி செய்த வழக்கில், ரூ.25 லட்சத்தை மனநலம் குன்றியவரின் வங்கி கணக்கில் செலுத்தும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மனநலம் குன்றியவர்

சென்னையை சேர்ந்தவர் வசந்தகுமார். இவருக்கு ஜெயபிரகாஷ் என்ற மகன் உள்ளார். மனநிலை பாதிக்கப்பட்டவர். வசந்தகுமாரின் முதல் மனைவி இறந்துவிட்டதால், மதுரையை சேர்ந்த ராஜேஸ்வரியை கடந்த 2014-ம் ஆண்டு 2-வதாக திருமணம் செய்தார். 2-வது மனைவி பெயரில் சில சொத்துகளை மதுரையில் வாங்கி, மகன் ஜெயபிரகாஷ் ஆகியோருடன் மதுரை ஊமச்சிகுளத்தில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் வசந்தகுமார், ராஜேஸ்வரி ஆகிய இருவரும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். இதனால் அவர்களின் சொத்துகளுக்குஜெயபிரகாஷ் மட்டும் வாரிசாக இருந்தார். ஆனால் அவரை வாரிசாக காட்டாமல், ராஜேஸ்வரியின் முதல் கணவரின் பிள்ளைகள், தங்களையே வசந்தகுமாரின் வாரிசு என்று சான்றிதழ் பெற்றனர்.

ஜாமீன் மனு

பின்னர் வசந்தகுமார்-ராஜேஸ்வரி பெயரில் இருந்த சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் ஒவ்வொன்றாக விற்றனர். திடீரென சொத்தை பிரிப்பதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்த புகாரின்பேரில் ராஜேஸ்வரியின் முதல் கணவரின் மகன்செந்தில்குமார், மகள் மீனா உள்ளிட்ட பலர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து, செந்தில்குமார் உள்பட பலரை கைது செய்தனர்.

செந்தில்குமார் உள்ளிட்டோருக்கு கீழ் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து அரசு தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கை நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்து, சொத்து மோசடி வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், ஜெயபிரகாசின் பாதுகாவலராக மதுரை ஐகோர்ட்டு வக்கீல் ஆனந்தவள்ளியை நியமித்தார். ஜெயபிரகாசுக்காக, ஆனந்தவள்ளி பெயரில் மதுரை ஐகோர்ட்டின் இந்தியன் வங்கியில் கணக்கு தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

ரூ.25 லட்சம்

முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

வசந்தகுமார், ராஜேஸ்வரி பெயரில் இருந்த சொத்துக்களை மோசடியாக விற்றதை திருப்பி கொடுத்து விடவோ அல்லது பணத்தையோ செந்தில்குமார் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அவர் மதுரை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் முதல் கட்டமாக ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும். அதன்பின் செந்தில்குமார் ஜாமீனில் வெளிவர அனுமதிக்கப்படுவார். வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஆஜராக வேண்டும். ஜாமீனில் வந்த பின்பு, ஒரு மாதத்துக்குள் மேலும் ரூ.15 லட்சத்தை அதே கோர்ட்டில் செலுத்த வேண்டும். ரூ.25 லட்சமும் அவர் திரும்ப பெற முடியாது. அந்த தொகையை மாவட்ட கோர்ட்டு, ஜெயபிரகாசுக்காக அவரது பாதுகாவலர் ஆனந்தவள்ளி பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். செந்தில்குமார் மோசடியாக விற்ற சொத்துகளை திரும்ப பெற ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

Next Story