விழுப்புரத்தில் புதிய போலீஸ் டி.ஐ.ஜி.யாக கே.எழிலரசன் பொறுப்பேற்பு ‘குற்றம் இல்லாத சரகமாக மாற்றுவதே லட்சியம்’ என பேட்டி
விழுப்புரத்தில் புதிய போலீஸ் டி.ஐ.ஜி.யாக கே.எழிலரசன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் புதிய போலீஸ் டி.ஐ.ஜி.யாக கே.எழிலரசன் பொறுப்பேற்றுக்கொண்டார். குற்றம் இல்லாத சரகமாக மாற்றுவதே லட்சியம் என அவர் கூறினார்.
டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு
விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த சந்தோஷ்குமார் பதவி உயர்வு பெற்று சென்னை ஐ.ஜி.யாக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை தெற்கு போக்குவரத்து இணை கமிஷனராக பணியாற்றி வந்த கே.எழிலரசன் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று காலை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் 28-வது டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திறம்பட பணியாற்றுவேன்
விழுப்புரம் காவல் சரகத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் என்னால் முடிந்த அளவு மக்களுக்காக திறம்பட பணியாற்றுவேன். அதேநேரத்தில் போலீசாரையும் நல்ல முறையில் வழிநடத்திச்செல்வேன். தற்போதுள்ள கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு விதித்துள்ள வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும். இந்த அசாதாரண சூழ்நிலையில் கொரோனா நோய் பரவலை முற்றிலும் தடுக்க காவல்துறை சார்பில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
குற்றம் இல்லாத சரகமாக
சட்டம்- ஒழுங்கு சிறப்பாக செயல்பட வேண்டும். செயல்படுத்தி காட்டுவோம். அதுதான் எங்களுடைய தலையாய கடமையாகும். விழுப்புரம் சரகத்தில் ‘ஜீரோ கிரைம்’ கொண்டு வருவதே எனது ஆசை, லட்சியம். எங்கும் குற்றமே இருக்கக்கூடாது. குற்றங்கள் இல்லாத சரகமாக விழுப்புரம் சரகத்தை மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். நான் பொதுவாக அதிகம் பேச மாட்டேன். என்னுடைய செயல்களே பேசும். பொதுமக்களின் நலனுக்காக என்னுடைய அலுவலகமும், முகாம் அலுவலகமும் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும். மக்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து குறைகளை தெரிவித்து அதனை தீர்த்துக்கொள்ளலாம். மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாக பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார். புதிதாக பொறுப்பேற்ற டி.ஐ.ஜி. கே.எழிலரசனின் சொந்த ஊர் புதுச்சேரியாகும். பி.எஸ்சி. தோட்டக்கலை படித்து 2004-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்தார். முன்னதாக டி.ஐ.ஜி. கே.எழிலரசனுக்கு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.விழுப்புரத்தில்
புதிய போலீஸ் டி.ஐ.ஜி.யாக
கே.எழிலரசன் பொறுப்பேற்பு
‘குற்றம் இல்லாத சரகமாக மாற்றுவதே லட்சியம்’ என பேட்டி
விழுப்புரம், ஜூலை.3-
விழுப்புரத்தில் புதிய போலீஸ் டி.ஐ.ஜி.யாக கே.எழிலரசன் பொறுப்பேற்றுக்கொண்டார். குற்றம் இல்லாத சரகமாக மாற்றுவதே லட்சியம் என அவர் கூறினார்.
டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு
விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த சந்தோஷ்குமார் பதவி உயர்வு பெற்று சென்னை ஐ.ஜி.யாக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை தெற்கு போக்குவரத்து இணை கமிஷனராக பணியாற்றி வந்த கே.எழிலரசன் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று காலை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் 28-வது டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திறம்பட பணியாற்றுவேன்
விழுப்புரம் காவல் சரகத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் என்னால் முடிந்த அளவு மக்களுக்காக திறம்பட பணியாற்றுவேன். அதேநேரத்தில் போலீசாரையும் நல்ல முறையில் வழிநடத்திச்செல்வேன். தற்போதுள்ள கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு விதித்துள்ள வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும். இந்த அசாதாரண சூழ்நிலையில் கொரோனா நோய் பரவலை முற்றிலும் தடுக்க காவல்துறை சார்பில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
குற்றம் இல்லாத சரகமாக
சட்டம்- ஒழுங்கு சிறப்பாக செயல்பட வேண்டும். செயல்படுத்தி காட்டுவோம். அதுதான் எங்களுடைய தலையாய கடமையாகும். விழுப்புரம் சரகத்தில் ‘ஜீரோ கிரைம்’ கொண்டு வருவதே எனது ஆசை, லட்சியம். எங்கும் குற்றமே இருக்கக்கூடாது. குற்றங்கள் இல்லாத சரகமாக விழுப்புரம் சரகத்தை மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். நான் பொதுவாக அதிகம் பேச மாட்டேன். என்னுடைய செயல்களே பேசும். பொதுமக்களின் நலனுக்காக என்னுடைய அலுவலகமும், முகாம் அலுவலகமும் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும். மக்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து குறைகளை தெரிவித்து அதனை தீர்த்துக்கொள்ளலாம். மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாக பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார். புதிதாக பொறுப்பேற்ற டி.ஐ.ஜி. கே.எழிலரசனின் சொந்த ஊர் புதுச்சேரியாகும். பி.எஸ்சி. தோட்டக்கலை படித்து 2004-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்தார். முன்னதாக டி.ஐ.ஜி. கே.எழிலரசனுக்கு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story