தஞ்சையில், நாளை மின்தடை
தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தஞ்சையில் சில பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை நகரிய உதவி செயற்பொறியாளர் சுகுமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் உயர் அழுத்த மின்பாதையில் மின்கம்பி மாற்றி அமைக்கும் பணிகள் நாளை(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மங்களபுரம் பீடர் உள்பட ஜெ.ஜெ.நகர், பொன் நகர், அண்ணாமலை நகர், எல்.ஐ.சி. காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story