ஏம்பலில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் அடக்கம் செல்போன் கோபுரம் மீது ஏறி வாலிபர் போராட்டத்தால் பரபரப்பு


ஏம்பலில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் அடக்கம் செல்போன் கோபுரம் மீது ஏறி வாலிபர் போராட்டத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 July 2020 5:49 AM GMT (Updated: 4 July 2020 5:49 AM GMT)

ஏம்பலில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் அடக்கம் செய்யப் பட்டது. இந்நிலையில் செல் போன் கோபுரத் தின் மீது வாலிபர் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரிமளம், 

அரிமளம் ஒன்றியம் ஏம்பல் கிராமத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாள். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிறுமியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, குழந்தையின் உடல் பெறப்பட்டு ஏம்பல் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு சிறுமியின் உடலுக்கு குழந்தையின் தந்தை மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்தை திருமயம் எம்.எல்.ஏ. ரகுபதி, மணமேல்குடி ஒன்றிய குழு தலைவர் பரணி.கார்த்தி கேயன் ஆகியோர் வழங்கினார் கள்.

செல்போன் கோபுரத்தில் ஏறி...

இதற்கிடையே அந்த சிறுமியின் உறவினரான டிராக்டர் டிரைவர் விஜய்(வயது 27) என்பவர், ஏம்பல் பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செல்போன் கோபுரம் மீது நின்ற விஜய்யிடம், போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு சிறுமி கொலை சம்பந்தமாக முறையான விசாரணை நடத்தவில்லை. ஒருவர் மட்டும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியாது. பலருக்கு தொடர்பு இருக்கலாம். எனவே முறையான விசாரணை நடத்த வேண்டும், என்று கூறினார்.

இதையடுத்து அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆவுடையார்கோவில் தீயணைப்பு வீரர்கள் கரிகாலன், காளிதாஸ் ஆகியோர் விஜய்யிடம் பேச்சு கொடுத்த வாறே செல்போன் கோபுரத்தின் மீது ஏறி, அவரை பிடித்து லாவகமாக கீழே இறக்கினார் கள். இதையடுத்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்ற விஜய்யின் போராட்டம் முடிவிற்கு வந்தது. இதையடுத்து விஜய் ஏம்பல் போலீஸ் நிலையத் திற்கு அழைத்து செல்லப் பட்டார். இதற் கிடையே சிறுமி கொலை சம்பவத்தில் தொடர்பு டையவர் களுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டிடம், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மனு அளித்தனர்.

Next Story