காரைக்காலில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை கவர்னர் கிரண்பெடி குற்றச்சாட்டு


காரைக்காலில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை கவர்னர் கிரண்பெடி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 July 2020 4:00 AM IST (Updated: 5 July 2020 2:16 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில்லை என கவர்னர் கிரண்பெடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

புதுச்சேரி, 

காரைக்காலில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில்லை என கவர்னர் கிரண்பெடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

காரைக்கால் மோசம்

புதுவை கவர்னர் கிரண்பெடி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

இது ஒரு தொற்று மற்றும் பேரழிவு மேலாண்மை சட்ட விதி மீறல்கள் பற்றிய பகுத்தாய்வு. உழவர்கரை நகராட்சி, அரியாங்குப்பம் மற்றும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்களில் இன்னும் சிறப்பாக செய்ய முடியும். காரைக் காலில் நிரவி, கோட்டுச்சேரி, திருநள்ளாறு மற்றும் நெடுங் காடு ஆகியவையும் சிறப்பாக செயல்பட முடியும். ஆனால் அவர்களது செயல்பாடுகள் மோசமாக உள்ளன. மாகி மற்றும் ஏனாமில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. காரைக்காலில் சமூக விலகல் மிகவும் மோசமாக காணப்படுகிறது.

வழக்குப்பதிவு

இதேபோல் தொழிலாளர் துறையில் ஆரோக்கிய சேது செயலியை எத்தனை நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெளிவாகக் கூற வேண்டும். மாகி போலீஸ் நிலையம் மற்றும் நகர மற்றும் போக்குவரத்து நகரம் இதேபோல் இன்னும் நன்றாக செயல்பட வேண்டும். குறிப்பாக லாஸ்பேட்டை, பெரியகடை, முத்தியால்பேட்டை, திருக்கனூர் நகர காவல் நிலையம், டி.ஆர்.பட்டினம் இன்னும் நன்றாக செயல்பட வேண்டும்.

முதலியார்பேட்டை, வில்லியனூர், திருக்கனூர் செயல்பாடு குறைவாக உள்ளது. பல்லூர் பூஜ்ஜியமாகும். டி.ஆர்.பட்டினம் மற்றும் பல்லூர் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இவை இன்னும் நன்றாக செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், வழக்கு சுமைகளை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் இந்த அறிக்கையை மேம்படுத்த உழைக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்குப்பதிவு செய்ய விடுமுறை இல்லை. சில இடங்களில் ஞாயிறு சந்தைகளில் கூட்டங் கள் கூடலாம். இவைகளை தடுக்க வேண்டும் அல்லது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story