சாலை அமைக்கும் பணியைதடுத்து நிறுத்திய கிராம மக்கள்
The villagers stopped the road construction work
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த கோடாலிக்கருப்பூரில் அணைக்குடம்- அணைக்கரை சாலையில் இருந்து வக்கரமாரி வரை 700 மீட்டர் தூரத்துக்கான சாலை அமைக்கும் பணி ரூ.15 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணி, தரம் குறைந்ததாக உள்ளது எனக்கூறி கிராம மக்கள் சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்த தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் மற்றும் ஒன்றிய பொறியாளர் விஜயன் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஒன்றிய பொறியாளர் மேற்பார்வையின் கீழ் தரமான சாலை அமைக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து தரமான சாலை பணிகள் நடைபெறும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்ற பின் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
Related Tags :
Next Story