ஊரடங்கால் வியாபாரம் இல்லாததால் கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
ஊரடங்கால் வியாபாரம் இல்லாததால் கடைக்காரர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 59). இவர் கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காரணத்தால் மளிகை கடையில் போதிய அளவு வியாபாரம் ஆகவில்லை. இதனால் மிகவும் மன விரக்தியில் இருந்த ராஜசேகரன் நேற்று காலை தனது மளிகை கடையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் தூக்கில் பிணமாக தொங்கிய ராஜசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story