உதவித்தொகை பெற விரும்புபவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்


உதவித்தொகை பெற விரும்புபவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
x
தினத்தந்தி 10 July 2020 10:20 AM IST (Updated: 10 July 2020 10:20 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியள்ளதாவது:

சிவகங்கை,

சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, இந்திரா காந்தி விதவை உதவித்தொகை, முதிர் கன்னி உதவித்தொகை, முதல்அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய ஊனமுற்றோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவி தொகை ஆகியவை பெறுவதற்கான மனுக்களை பொதுமக்கள் அந்தந்த பகுதி தாசில்தார் அலுவலகங்களில் உள்ள இணைய தள முகவரியில் www.https://edistricts.tn.gov.in:8443/certificatescsc TNeGA தமிழ்நாடு இசேவை மையத்தின் மூலம் மனு செய்து கொள்ளலாம்.

எனவே சிவகங்கை மாவட்டத்தில் உதவி தொகை பெற விரும்புபவர்கள் தங்களின் விண்ணப்பங்களை நேரில் சென்று கொடுப்பதற்கு பதிலாக இணைய தளம் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story