திருவள்ளூர் அருகே முகவரி கேட்பது போல் மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறிப்பு
திருவள்ளூர் அருகே முகவரி கேட்பது போல் மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறிக்கப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு மோகன் நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி மஞ்சுளா (வயது 64). நேற்று முன்தினம் மாலை மஞ்சுளா தன்னுடைய வீட்டின் அருகே உள்ள மருந்து கடைக்கு மருந்து வாங்கச்சென்றார். பின்னர் அவர் தன்னுடைய வீட்டின் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முகவரி கேட்பது போல் அவரிடம் பேச்சு கொடுத்தனர்.
பின்னர் திடீரென அவர்கள், மஞ்சுளா அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.
இது குறித்து மஞ்சுளா செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story